search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தில் சிகிச்சை பெற்ற நீலகிரியை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி
    X

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தில் சிகிச்சை பெற்ற நீலகிரியை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி

    • இத்திட்டம் நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர்.

    ஊட்டி,

    இன்னுயிர் காப்போம்-நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டம், நீலகிரி மாவட்டத்தில் 1 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், 3 அரசு மருத்துவமனைகளிலும், 6 தனியார் மருத்துவ மனைகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இத்திட்டத்தின் மூலம் நமது மாவட்டத்தில் 787 நபர்கள் சிகிச்சை பெற்றுள்ளனர்.

    இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற குமார் கூறியதாவது:-

    என் பெயர் குமார் (வயது 24). என் தகப்பனார் பெயர் தயாளன், நாங்கள் கேத்தி பாலாடா அருகே வசித்து வருகிறோம். நான் 05.05.2023 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.

    உடனே என்னை ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 நேரம் திட்டத்தின் கீழ் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது நான் நலமாக உள்ளேன். இதுபோன்ற திட்டத்தினை அறிவித்த முதலமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றி. இவ்வாறு தெரிவித்தார்.

    இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்ற அருண் பிரசாத் கூறியதாவது:-

    என் பெயர். அருண் பிரசாத் எனக்கு 30 வயதாகிறது. என் தகப்பனார் பெயர் செல்வராஜ். நான் 16.04.2023 அன்று, கல்லட்டி அருகே உள்ள பைசன் வியூ பாயிண்டில் எனது நான்கு சக்கர வாகனத்தில் சென்ற போது திடீரெனெ வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் நான் காயம் அடைந்தேன்.

    உடனே ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி அழைத்து சென்று நம்மை காக்கும் 48 மணி நேரம் திட்டத்தின் கீழ் போதிய சிகிச்சை அளிக்கப் பட்டது.

    தற்போது சிகிச்சைக்கு பின் நான் நலமாக உள்ளேன். திடீரென ஏற்படும் விபத்துக்களை சாதாரணமாக என்னாமல் உயிர் சேதத்தினை தவிர்க்கும் வகையில், உயிர்காக்கும் நோக்கத்தில் இதுபோன்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    தற்போதைய காலத்தில் வாகனம் இல்லாமல் பயணிப்பது என்பது மிகவும் சிரமமான ஒன்றாகும். இது போன்ற சூழ்நிலையில், விபத்தினால் ஏற்படும் உயிர்சேதங்களை தவிர்க்கும் பொருட்டு இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48 மணி நேர திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.

    Next Story
    ×