search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் முடிவடைந்த  நிலையில் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள்
    X

    கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்களை படத்தில் காணலாம்.

    புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில் கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள்

    • பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர்.
    • புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் பொதுமக்கள் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை புரட்டாசி மாதம் முடி வடைந்து தற்போது ஐப்பசி மாதம் நடைபெற்று வரு கிறது. பலர் புரட்டாசி மாதம் முழுவதும் அசை வத்தை தவிர்த்து விரதம் இருந்து வந்த நிலையில் புரட்டாசி மாதம் தற்போது முடிவடைந்த முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலை முதல் மக்கள் குவிந்தனர்.

    ஒரு மாதத்திற்கு அசைவம் சாப்பிடாமல் இருந்த நிலை யில் தற்மபோது புரட்டாசி மாதம் முடிந்த நிலையில் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர். பொதுமக்கள் அதிகள வில் குவிந்தாலும் மீன்களின் விலை எப்போதும் போல் வழக்கமான விலைக்கு விற்றது. வஞ்சரம் 700 ரூபாய், சங்கரா 300 ரூபாய், கொடுவா 350 ரூபாய், இறால் 250 ரூபாய், நண்டு 400 ரூபாய் என்ற விலையில் இன்று மீன்கள் விற்பனை யானது.

    Next Story
    ×