search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விளாத்திகுளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு மக்கள் முன்வர வேண்டும்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    கீழ விளாத்திகுளம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மார்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்ட காட்சி.

    விளாத்திகுளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு மக்கள் முன்வர வேண்டும்- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. பேச்சு

    • கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது.
    • தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    விளாத்திகுளம்:

    தொழிலாளர் தினத்தை யொட்டி விளாத்திகுளம் அருகே கீழவிளாத்திகுளம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சிமன்ற தலைவர் நவநீத கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மார்க்க ண்டேயன் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், ஒரு கோடி குடும்ப அட்டைகளில் உள்ள பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ. 1000, செப்டம்பர் 15-ம் தேதி முதல் தமிழ்நாடு முதல்-அமைச்சர் வழங்க உள்ளார். பட்டா வேண்டுவோர் விண்ணப்பம் செய்தால் உடனடியாக செய்து கொடுக்கப்படும். பண்ணை குட்டை அமைப்பதற்கும், கூடுதல் மின்மாற்றி தேவைப்படும் இடங்க ளுக்கும் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் அனைத்து வீடுகளுக்கும் தேவையான குடிநீர் திட்டத்தை நிறைவேற்றும் பணியாக கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு ரூ. 10 லட்சமும், குரளய ம்பட்டிக்கு ரூ. 19.85 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வழங்கப்பட உள்ளது.

    அதே போல், 2024-25ம் ஆண்டில் கீழ விளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ விளாத்திகுளம், குரளயம்பட்டி, சோலைமலையன்பட்டி கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் ரூ. 42 லட்சத்தில் சிமென்ட் சாலை, வாறுகால் உள்ளிட்ட வசதிகள் மேற்கொள்ளப்படுகிறது. கீழ விளாத்திகுளம் ஊராட்சியில் மரக்கன்றுகள் அதிகம் நடுவதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தின்போது, எலக்ட்ரானிக் தையல் எந்திரம் வாங்குவதற்காக உதவி கேட்ட பத்திரகாளி என்ற பெண்ணுக்கு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தனது சொந்த நிதியில் ரூ. 10 ஆயிரம் வழங்கினார். மீதமுள்ள பணம் கூட்டுறவு சங்கம் மூலம் வட்டியில்லா கடனாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

    கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேலு, முத்துக்குமார், மண்டல துணை தாசில்தார் பாலமுருகன் மற்றும் அரசு துறை அலுவலர்கள், கிராமமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×