search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆறுமுகநேரியில் இன்று மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
    X

    மறியல் போராட்டம் நடந்த போது எடுத்த படம்.

    ஆறுமுகநேரியில் இன்று மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் 'திடீர்' சாலை மறியல்

    • பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த இடத்தில் கொட்டப்பட்டு வந்தன.
    • மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி பேரூராட்சியின் பொது பயன்பாட்டிற்காக நகர தி.மு.க செயலாளரான நவநீத பாண்டியன் தனக்கு சொந்தமான 20 சென்ட் நிலத்தை கடந்த ஆண்டு தானமாக வழங்கினார். இதன் அன்றைய மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும்.

    ஆறுமுகநேரி ரெயில் நிலையத்திற்கு சற்று தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்தில் பேரூராட்சி யில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இதனிடையே அந்த இடத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி பூங்காவுடன் கூடிய நவீன மின் மயானம் அமைக்க ரூ. 1 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன.

    இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் சுற்று வட்டாரத்தில் உள்ள பெரியான்விளை, செல்வ ராஜபுரம், பெருமாள்புரம், கணேசபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் 50 பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆழ்வை ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திரண்டு இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். உடனடியாக மின்மயான பணிகள் நிறுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    இந்தப் போராட்டம் காரணமாக திருச்செந்தூர்- தூத்துக்குடி நெடுஞ்சாலை யில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×