search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு
    X

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு இன்ஸ்பெக்டர்கள் (போக்குவரத்து) ரவிச்சந்திரன், சந்திரா, கருணாகரன் மற்றும் ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் திருக்குறள் புத்தகம் வழங்கினர்.

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி நூதன முறையில் விழிப்புணர்வு

    • முககவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.
    • முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்துறையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பொதுமக்கள் பாராட்டினர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தொற்று பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டாயி ரத்தை தாண்டி விட்ட தால் அனைத்து மாவட்ட ங்களிலும் தகுந்த முன்னெ ச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக சுகாதாரதுறை அனைவரும் கட்டாய முககவசம் அணிய உத்தர விட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்திலும் சில தினங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று தஞ்சை மாநகரில் மட்டும் 16 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் முககவசம் அணிவதன் அவசியத்தை பொதுமக்களுக்கு ஏற்படுத்த தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்பிரியா , தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் கபிலன் ஆகியோரது அறிவுரையின் பேரில் தஞ்சை மாவட்ட காவல்துறை மற்றும் தஞ்சை ஜோதி அறக்க ட்டளை சார்பில் அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்கு இனிப்பு மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கி நூதனமுறையில் விழிப்புணர்வை ஏற்படு த்தும் நிகழ்ச்சி தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே நடைபெற்றது.

    இதில் தஞ்சை போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் , தஞ்சை மேற்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா , தஞ்சை கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் , ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அரசு உத்தரவை பின்பற்றி முககவசம் அணிந்து வந்த பொதுமக்கள் , வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கி முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு நோய் பெருந்தொற்று பற்றியும் நோய் பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அறிவுரை கூறியும் இலவசமாய் முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    முககவசம் அணியாமல் அல்லது தனிநபர் இடைவெளியை கடைபிடி க்காமல் வருபவர்களுக்கு தற்போது எச்சரிக்கை விடுத்து முககவசம் வழங்கி வருவதாகவும் அடுத்த கட்டமாக கடும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

    முககவசம் அணிந்து வந்தவர்களுக்கு காவல்து றையினர் இனிப்புகளையும் திருக்குறள் புத்தகத்தையும் வழங்கியதை பார்த்த பொதுமக்கள் இந்த நூதன முயற்சியை பாராட்டினர்.

    ஏற்பாடுகளைஜோதி அறக்கட்டளை மேலா ளர் ஞானசுந்தரி மேற்பா ர்வையில் அறக்கட்டளை களப்பணி யாளர்கள் சிவரஞ்சனி, அபர்ணா மற்றும் தன்னா ர்வலரான தஞ்சை புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஆர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர் .

    Next Story
    ×