என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி கலெக்டர் மோகன் வழங்கினார்
- விழுப்புரத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் மோகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
- மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரர்கள் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது உடனடியாக கவனம் எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு வழங்கிட வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
இந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுமார் 427 மனுக்கள் பெறப்பட்டது. அதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை நேரடியாக பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். மேலும், முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், முதல்வரின் முகவரி மனுக்கள் மற்றும் அமைச்சர் களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது உடனடி தீர்வு காண அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மாவட்ட தாட்கோ மூலம், மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவியாக 10 பயனாளிகளுக்கு ரூ.21,15,000-க்கான காசோலையினையும், 3 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகையாக ரூ.12,000-க்கான காசோலையினையும், 20 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டையும் என மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.21.27 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் மோகன் வழங்கினார். முன்னதாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பொதுமக்களுக்கு மாவட்ட மகளிர் திட்ட துறையின் மூலம், இலவசமாக மனுக்கள் எழுதிக்கொடுக்கப்பட்டு வருவதை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு, பொதுமக்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் எண்ணிக்கையில் பணியாளர்கள் பணி மேற்கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை குறித்த மனுக்களை பெற்றுக்கொண்டதுடன், மகளிர் குழுக்கள் மூலம், உற்பத்தி செய்யும் பொருட்கள் பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டதுடன், மக்களை கவர்ந்திடும் வண்ணம் அழகு சாதனப் பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்திட வேண்டும் என மகளிர் குழுக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) சரஸ்வதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம் காஞ்சனா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் யசோதா, மாவட்ட தாட்கோ மேலாளர் குப்புசாமி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்