search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில்  மக்கள் குறைகேட்பு கூட்டம்: மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு
    X

    குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் கலெக்டர் பாலசுப்ரமணியம் மனுக்கள் வாங்கிய காட்சி. 

    கடலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டம்: மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்: கலெக்டர் உத்தரவு

    • கடலூரில் மக்கள் குறைகேட்பு கூட்டதில் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    • உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடி–யாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம், தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் குடும்பஅட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிறனாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பட்டா தொடர்பான 58 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 196 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 13 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 12 மனுக்களும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டம் தொடர்பாக 38 மனுக்களும், தையல் எந்திரம் கோரி 48 மனுக்களும், இதர மனுக்கள் 73 ஆக மொத்தம் 438 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார–ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

    மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொதுமக்களின் குறை தீர்ப்பது தான் நம்முடைய தலையாய கடமையாகும். அவ்வாறு அவர்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களுக்கும் துறை ரீதியாக மேஜைகள் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை மூலம் உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணன், தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×