என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்
- 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும்.
- புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஆலமரத்தடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
ஒன்றிய செயலாளர் ஸ்டாலின்பாபு தலைமை தாங்கினார்.
மாநில குழு உறுப்பினர் நாகை மாலி எம்.எல்.ஏ பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிலுவையில் உள்ள ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பெட்ரோல்- டீசல், சமையல் எரிவாயு விலை வியர்வை குறைக்க வேண்டும், அக்னிபாத் திட்டத்தின் மூலம் பலவீனப்படுத்தும் முயற்சியை நிறுத்த வேண்டும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்வியை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், கஸ்தூரி, விவசாய சங்க ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி, முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், ஜனநாயக வாலிபர் சங்கம் ஒன்றிய செயலாளர் பாலு, ஒன்றிய தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்று கடைகள், வீடுகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.