என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
குன்னம் அருகே மின்கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி பலி
Byமாலை மலர்26 Aug 2022 2:54 PM IST
- கண்ணதாசனுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது
- மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி வடக்கு தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 40), விவசாயி. சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் கம்பு பயிரிடப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின் கம்பி வேலியில் சிக்கி ஆண் காட்டுப்பன்றி ஒன்று மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காட்டுப்பன்றியின் உடலை மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து சித்தளி வனப்பகுதியில் புதைத்தனர்.
மேலும் மின் கம்பி வேலியில் சிக்கி காட்டுப்பன்றி இறந்ததால் கண்ணதாசனுக்கு வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் வசூலித்தனர்.
Next Story
×