என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு வழங்க வேண்டும்
- மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சமூகத்தில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்றனர்
- விழிப்புணர்வு பேரணியில் முழக்கம்
பெரம்பலூர்:
மாற்றுத்திறனாளி குழந்தைகளை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கவும் விழிப்புணர்வு பேரணி"
பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உள்ளடக்கிய திட்டக்கூறின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்கவும், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்கும் பொருட்டு விழிப்புணர்வு பேரணி சத்திரமனை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விழிப்புணர்வு பேரணிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை வகித்து கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். உதவி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன், பள்ளி தலைமை ஆசிரியர் தமயந்தி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வீரமணி, மாவட்ட உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்பேரணி போஸ்ட் ஆபீஸ் தெரு, சிவன்கோவில் தெரு மற்றும் பஸ்ஸ்டாண்ட் வழியாக விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்று மாற்றுத்திறன் மாணவர்களை பள்ளியில் சேர்த்தல், சமூகத்தில் சமவாய்ப்பு வழங்குதல், மாற்றுத்திறனாளி மாண வர்களுக்கு அரசு வழங்கும் சலுகைகள், திட்டங்கள் குறித்தும், ஊனம் ஒரு தடையல்ல,ஊன்றுகோலாய் நாமிருந்தால், சிந்தனையில் மாற்றம் சமூகத்தின் ஏற்றம், இணைவோம் மகிழ்வோம் போன்ற வாசகங்களை கோஷமிட்டு மாணவர்கள் சென்றனர். இதில் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் சுப்ரமணியன், குணசேகரன், கலைவாணன், ரமேஷ், ரமேசு, ஜனனி, சிறப்பு பயிற்சியாளர்கள் மரகதவல்லி, துர்கா, ராணி பரிமளா, ரூபி, தனவேல், இயன்முறை மருத்துவர் குமரேசன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஓவிய ஆசிரியர் செல்வராஜ் மற்றும் சிறப்பு பயிற்சியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர். முடிவில் வட்டார உள்ளடக்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நன்றி கூறினார்.






