search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல-பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேச்சு
    X

    அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல-பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேச்சு

    அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பேசினார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்பை அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அனைவருக்கும் உணர்த்த வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் பேசினார்.அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் போட்டித் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் வகையில், பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பை பார்வையிட்டு அவர் பேசும்போது, மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எளிதில் எதிர்கொள்ளும் வகையில், வார இறுதி நாள்களில் இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இப்பயிற்சியில், பெரம்பலூர் ஒன்றியத்தி லிருந்து 49 மாணவர்களும், வேப்பந்தட்டை ஒன்றியத்திலிருந்து 65 மாணவர்களும், ஆலத்தூர் ஒன்றியத்திலிருந்து 31 மாணவர்களும், வேப்பூர் ஒன்றியத்திலிருந்து 51 மாணவர்களும் என மொத்தம் 196 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இப்பயிற்சி வகுப்புகளை, மாவட்டத்தில் உள்ள 138 மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நடத்தி வருகின்றனர். இந்தப் பயிற்சி வகுப்பில் அளிக்கப்படும் அறிவுரைகளையும், நுணுக்கங்களையும் கற்று போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற வேண்டும். கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை அனைவருக்கும் உணர்த்தும் வகையில், நன்கு படித்து நீட் தேர்வை எளிதில் எதிர்கொண்டு, அனைவரும் மருத்துவ ர்களாக வர வேண்டும். கல்விக்காக உங்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது என்று பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலர் குழந்தைராஜன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×