என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு
- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி டி.ஐ.ஜி. சரவணசுந்தர் ஆய்வு மேற்கொண்டார்
- போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் எஸ்.பி. அலுவலக வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டார். அங்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக நிர்வாகம் தொடர்பான பணிகள், பராமரிக்கப்படும் ஆவணங்கள், அமைச்சு பணியாளர்கள் விபரம், வருகைப் பதிவேடு போன்றவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அலுவலகத்திற்கு தேவையான அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து அமைச்சு பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மதியழகன், பாண்டியன், மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன் ஆகியோர் உடனிருந்தனர்.






