என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசிரியர்களுக்கு  நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு ஆய்வு
    X

    ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பு ஆய்வு

    • ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் எண்ணும் எழுத்தும் பயிற்சி வகுப்பை ஆய்வு செய்தனர்.
    • மாணவர்களிடம் அடிப்படை திறன்களை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பற்றி அறிவுறுத்தினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சியை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பள்ளிகல்வித்துறை மூலம் பெரம்பலூர் வட்டார வளமையம் சார்பில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு 3 நாட்கள் நடைபெறும் எண்ணும் எழுத்தும் பயிற்சி மூன்றாம் கட்ட பயிற்சி நடந்தது வருகிறது. இந்த பயிற்சியில் 123 ஆசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெறுகின்றனர். இந்நிலையில் பயிற்சியை அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநர் உஷாராணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பயிற்சியின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்களிடம் அடிப்படை திறன்களை எவ்வாறு கொண்டு சேர்க்க வேண்டும் என்பது பற்றியும் எடுத்துக்கூறி புத்தகத்தில் உள்ள கருத்துகள் மட்டுமின்றி புதுப்புது உத்திகளை வகுப்பறையில் பயன்படுத்தவேண்டும் என ஆசிரியர்களுக்கு இயக்குநர் அறிவுறுத்தினார். பாடாலூர் மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன், ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, வட்டார கல்வி அலுவலர் அருண்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் தேவகி, வஹிதாபானு ஆகியோர் உடனிருந்தனர்.


    Next Story
    ×