என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெரம்பலூரில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட்
- பெரம்பலூரில் கூடுதல் விலைக்கு மது விற்ற டாஸ்மாக் ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யபட்டனர்
- மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளில், திருச்சி டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் மாலதி திடீர் ஆய்வு செய்தார். அப்போது, பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை, இரூர் கிராமத்தில் அமைந்துள்ள மதுபான கடைகளை ஆய்வு செய்தபோது, கூடுதலாக ரூ. 10 வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு உரிய அபராதம் விதித்து, துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள பெரம்பலூர் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் திருமாறனுக்கு உத்தரவிட்டார்.
இதன்பேரில் பெரம்பலூர் டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்களை விற்பனை செய்த சூப்பர்வைசர் முருகேசன், இரூர் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் ராஜா, மேலும் பாடாலூர் டாஸ்மாக் கடையிலிருந்து நிர்வாக அனுமதியின்றி இரூர் கடையில் பணிபுரிந்த பாடாலூர் சூப்பர்வைசரான மற்றொரு முருகேசன் மற்றும் அரியலூர் பழைய பஸ்டாண்டு இருசக்குட்டை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விலைப் பட்டியல் வைக்காமலும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சேல்ஸ்மேன் குறித்து கண்டு கொள்ளாதிருந்த சூப்பர்வைசர் செல்வமணி ஆகிய 4 சூப்பர்வைசர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.