search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - கலெக்டர் வேண்டுகோள்
    X

    போதைப்பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை - கலெக்டர் வேண்டுகோள்

    • போதைப்பொருள்களை ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது

    பெரம்பலூர்:

    பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள 121 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் ஒன்றியம், ஆலம்பாடி ஊராட்சிக்குள்பட்ட செஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் பங்கேற்று கலெக்டர் பேசியதாவது:

    மாவட்டத்தில் பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு அல்லது மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் என பிரித்து, கண்காணித்து ஒவ்வொருவருக்கும் அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆலம்பாடி ஊராட்சியில் 12 குழந்தைகள் மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களாகக் கண்டறியப்பட்டுள்ளனா். சத்துக் குறைபாடு கண்டறியப்பட்ட 12 தாய்மாா்களும், ஊட்டச்சத்து அலுவலா்களின் வழிமுறைகளை கையாள வேண்டும். மிதமான ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும், அதை கவனத்தில்கொண்டு மருத்துவரை அணுகி தேவையான உணவு உட்கொள்ள வேண்டும்.

    போதைப்பொருள்கள் இல்லாத மாவட்டத்தை உருவாக்குவது குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. வட்டார அளவில் சிறப்புக் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. போதைப் பொருள்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் காவல்துறை அல்லது அரசு அலுவலகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதைப் போருள்களை முற்றிலும் ஒழிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றாா் அவா்.

    Next Story
    ×