search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும்   -  அமைச்சர் சிவசங்கர் தகவல்
    X

    கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

    • கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து விரைவில் சாலைகள் அமைக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
    • வயல்களுக்கு செல்லும் வகையில்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆதனூரில் ரூ.64 லட்சம் மதிப்பீட்டிலான ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான கட்டுமான பணிகளையும், கொட்டரை அரசு உயர்நிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான பணிகளையும், கொளத்துாரில் பகுதிநேர நியாயவிலைக் கடையினையும், புதுக்குறிச்சியில் முழுநேர நியாயவிலைக்க டையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,

    குன்னம் சட்டமன்றத்தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கொட்டறை நீர்த்தேக்கத்திலிருந்து வயல்களுக்கு செல்லும் வகையில் சாலை அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

    விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும். கடந்த 10 ஆண்டுகளாக பொதுமக்களின் கோரிக்கைகள் எதற்கும் கடந்தகால அரசு செவிசாய்க்க வில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் பொறுப்பேற்ற நாள் முதல் ஏழை, எளிய அடித்தட்டு மக்களின் கோரிக்கைகளை அறிந்து அவற்றை நிறைவேற்ற உடனுக்குடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

    அரசுப்பேருந்துகளில் கட்டண உயர்வு என்ற பேச்சுக்க இடமில்லை. டீசல் விலை உயர்வு, பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சூழல்கள் இருக்கும்போதும், மக்களின் மீது அந்த சுமையை வைக்காமல், அரசே அந்த சுமையினை ஏற்றுக்கொள்ளும், பேருந்து கட்டணத்தை உயர்த்த கூடாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது மக்களின் நலன் காக்கும் அரசு, மக்களுக்கான அரசு எனவே, அரசுப்பேருந்துகளின் கட்டணம் உயர்வு என்ற பொய்யான செய்தியினை யாரும் நம்ப வேண்டாம்.

    இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

    Next Story
    ×