search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகார்
    X

    விசாரணை குழு தலைவர் உயர்கல்வி துறை கூடுதல் செயலாளர் பழனிசாமியை சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருள் நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.  

    பெரியார் பல்கலைக்கழக முறைகேடு புகார்

    • கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர்.
    • 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நியமனங்கள், இட ஒதுக்கீட்டு மீறல் உள்ளிட்டவை குறித்து புகார் எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர், அமைப்பினர் உயர் கல்வித் துறைக்கு புகார் மனுக்களை அனுப்பி வைத்தனர்.

    இதனை தொடர்ந்து விசாரணை நடத்த உயர் கல்வித் துறை கூடுதல் செயலாளர் பழனிசாமி மற்றும் இணைச்செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட விசாரணைக் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து கடந்த மாதம் 6-ந் தேதி குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களிடம் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக இன்று பெரியார் பல்கலைக்கழக முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள், அம்பேத்கர் மக்கள் இயக்கம் மாநில தலைவர் ஜங்ஷன் அண்ணாதுரை, பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன், தொழிலாளர் சங்கத் தலைவர் கனிவண்ணன், ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த முத்து கண்ணன் உள்ளிட்ட 7 பேரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது பல்கலைக்க ழகத்தின் முறைகேடுகள் குறித்து விரிவாக அவர்கள் புகார் கூறினர். மேலும் உயர் பதவியில் உள்ளவர்கள் ஒரே நேரத்தில் 3 இடங்களில் பணிபுரிந்ததாகவும் கூறினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு நியமிக்கப்பட்ட நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணிகளில் உரிய தகுதி உள்ளவரை நியமிக்காமல் தகுதி இல்லாதவரை நியமித்துள்ளனர் என புகார் தெரிவித்தனர்.

    Next Story
    ×