search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி; கலெக்டர் பார்வையிட்டார்
    X

    செல்லப்பிராணிகள் கண்காட்சியை கலெக்டர் மகாபாரதி பார்வையிட்டார்.

    மயிலாடுதுறையில் செல்லப்பிராணிகள் கண்காட்சி; கலெக்டர் பார்வையிட்டார்

    • செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.
    • அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் "ஓயா உழைப்பின் ஓராண்டு கடைக்கோடி தமிழரின் கனவுகளை தாங்கி"தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 5-ம் நாளில் மாவட்டத்தில் முதன்முறையாக கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது.

    இதில் டாபர்மென், லேப்ரடார், கோல்டன் ரெட்ரைவர், ஸ்பிட்ஸ், போமரேனியன் உள்பட பல வெளிநாட்டு நாய்களும், சிற்பி பாறை, கன்னி, கோம்பை, ராஜபாளையம் உள்ளிட்ட உள்நாட்டு நாய்களும் கலந்து கொண்டன.

    நிகழ்ச்சிக்கு சிறப்பு பார்வையாளராக கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். நமக்கு அதிகமான மனஅழுத்தம் இருக்கும்போது செல்லப்பிராணிகள் உடன் ஒரு ஐந்து நிமிடம் நேரம் செலவழிக்கும்போது மனஅழுத்தம் நீங்கிவிடும்.

    இக்கண்காட்சி மயிலாடுதுறையில் முதன்முதலாக மிக குறுகிய காலத்தில் நாய்கள் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது என்றார்.

    கண்காட்சியில் கலந்து கொண்ட அனைத்து செல்லப்பிராணிகளுக்கும் குடற்புழு நீக்கம், வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது.

    மேலும், சிறந்த 10 செல்லப்பிராணிகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஏ.பி.மகாபாரதி, போலீஸ் சூப்பிரண்டு நிஷா ஆகியோர் சிறப்பு செய்தனர்

    இதில், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா, மயிலாடுதுறை ஒன்றியக்குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார், கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஈஸ்வரன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×