search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில்  கழிவு நீரோடை அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் சிவபத்மநாதன் கலெக்டரிடம் மனு
    X

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் கலெக்டர் ஆகாசை சந்தித்து மனு அளித்தார்.

    ஆலங்குளத்தில் கழிவு நீரோடை அமைப்பது குறித்து வியாபாரிகளுடன் சிவபத்மநாதன் கலெக்டரிடம் மனு

    • கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.
    • அமைச்சரை நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார்.

    தென்காசி:

    தென்காசி - நெல்லை நான்கு வழிச்சாலையில் ஆலங்குளம் எல்கைக்கு உட்பட்ட இடங்களில் சாலையின் வடபுறம் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கழிவுநீர் கால்வாய் ஆலங்குளம் யூனியன் அலுவலகம் முதல் ஊர்மடை வரை அமைய உள்ளது.

    இந்த கழிவுநீர் கால்வாய் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியாக அமைய வேண்டும் என்று ஆலங்குளம் வியா பாரிகள் சங்கம் சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனிடம் தெரிவித்திருந்தனர்.

    அதன்படி சில நாட்களுக்கு முன் நெடுஞ்சாலை துறை அமைச்சரை சென்னையில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கையினை சிவ பத்மநாதன் முன் வைத்திருந்தார். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து சாலையின் கழிவுநீர் கால்வாய் குறித்து மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வரைபடம் மூலம் காண்பித்து விளக்கி னார்.

    கோரிக்கையின் முக்கிய த்துவம் குறித்து கலெக்டர் ஆகாஷ் சம்பந்தப்பட்ட அதிகாரி களை அழைத்து ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார். இந்நிகழ்வின் பொழுது ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா, நெல்சன்,தொழிலதிபர் மணிகண்டன் மற்றும் வியா பாரிகள் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×