என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாம்பவர்வடகரை பேரூராட்சி சார்பாக அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு
- தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.
- தார்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மனுவில் கூறபட்டிருந்தது.
சாம்பவர் வடகரை:
சாம்பவர்வடகரை பேரூராட்சி மன்ற தலைவர் சீதாலட்சுமி முத்து சார்பாக தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் நேரில் சென்று மனு கொடுத்தார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சியில் 14 -வது வார்டு பெரியகுளம் சாலை- விந்தன் கோட்டை அழகிய மணவள பெருமாள் கோவில் இணைப்பு சாலை முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. சிதிலமடைந்த தார் சாலையையும் மீதமுள்ள மண் சாலையையும் தார்சாலையாக அமைத்து, சாலை இருபுறமும் வெள்ளை பாதுகாப்பு சுவர்கள் அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும், சாம்பவர் வடகரை பேரூராட்சி 12- வது வார்டு வேலாயுதபுரம் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அப்துல் கலாம் நகரில் வீடுகள் கட்டி அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி மக்களின் நலன் கருதி சுமார் 550 மீட்டர் தொலைவுக்கு கழிவுநீர் கால்வாய் அமைத்து குடிநீர் பைப் லைன் அமைத்திடவும் மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைத்திட நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.