search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் சீரான குடிநீர் வழங்ககோரி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து மனு
    X

    மாநகராட்சி குறைதீர்க்கும் கூட்டத்தில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோரிடம் பொதுமக்கள் மனுக்கள் அளித்த காட்சி.

    பாளை 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் சீரான குடிநீர் வழங்ககோரி தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்து மனு

    • மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.
    • கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிப்பவர்கள் சிரமப்படுகின்றனர்.


    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாநகராட்சி மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் ராஜு, துணை கமிஷனர் தாணு மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் குடியிருப்பு வாசிகள் கழுத்தில் தண்ணீர் பாட்டில்களை மாலையாக அணிந்தபடி வந்து மனு அளித்தனர். மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கர பாண்டியன் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

    பாளை மண்டலம் 32-வது வார்டு செயின்ட் பால்ஸ் நகரில் ஆயுதப்படை குடியிருப்பு தென்புறம், இசக்கி அம்மன் கோவில் வடபுறம் உள்ளிட்ட பகுதி களில் மற்றும் செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு அப்பா சாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு மாநகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் பல வாரங்களாக முறையாக கிடைப்பதில்லை.

    ஒரு சில நாட்கள் மட்டும் சிறிது நேரம் குழாய்களில் குடிதண்ணீர் வருகிறது. இதனால் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டால் அப்பகுதியில் வசிக்கும் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.எனவே சீராக குடிதண்ணீர் தினமும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    தொடர்ந்து அவருடன் வந்திருந்த செயின்ட் பால்ஸ் நகர் மக்கள் நல அபிவிருத்தி சங்க தலைவர் சாம் சுந்தர் ராஜா, செயலாளர் சங்கர நாராயணன், பொருளாளர் முருகேசன், உப தலைவர் மனோகரன், துணை செயலாளர் ராஜதுரை ஆகியோர் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    செயின்ட் பால்ஸ் நகர் மேற்கு பகுதி சாலையானது 15 வருடங்களுக்கும் மேலாக மோசமாக இருந்து வந்தது. தற்போது புதிய தார் சாலை அமைத்து தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புதிதாக அமைக்கப்பட்ட சாலை சற்று உயர்ந்துள்ளதால் அதன் இரு ஓரங்களிலும் செம்மண் நிரப்பி விபத்தை தடுக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் புதிய சாலை அமைக்கப்பட்ட தெருவில் பாதாள சாக்கடை இல்லாததால் கழிவு நீர் திறந்த வெளி சாக்கடையில் விடப்படு கிறது.

    இதனால் ஆங்காங்கே சாக்கடை தண்ணீர் தேங்கி கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தி ஆகிறது. அதேபோல் சாக்கடைக்கு மேல் நான்கு இடத்தில் ரோடு பாலம் உள்ளது. அந்த பாலங்கள் இடிந்துள்ளதால் சாக்கடை வெளியே வர முடியாமல் இருக்கிறது. எனவே சாக்கடை அடைப்புகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதான சாலையில் மழைநீர் தேங்கும் நிலையில் சில சாலையில் உள்ளன. அதை சரி செய்ய வேண்டும். இலந்தைகுளம் நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்து வருவதால் குளம் மேடாகி விட்டது. அதனையும் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

    Next Story
    ×