search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்
    X

    சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள்

    • சீர்காழி பகுதிகளில் பயிர்களை சேதப்படுத்தும் பன்றிகள் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த பகுதியில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில சீர்காழி, தென்பாதி, சட்டநாதபுரம், விளந்திட சமுத்திரம், திட்டை, செம்மங்குடி உள்ளிட்ட பகுதிகளில பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளன.

    இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டமாக வந்து சம்பா நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கோவி. நடராஜன் கூறுகையில், எனது வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து சேதப்படுத்தி வருகிறது.

    இதனால் இந்த ஆண்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நெற்பயிர்களை தாக்கும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×