search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருட்டு  போலீஸ் டி.எஸ்.பி. எச்சரிக்கை
    X

    பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் போலீசா ஆய்வு செய்த போது எடுத்த படம்.

    பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் மணல் திருட்டு போலீஸ் டி.எஸ்.பி. எச்சரிக்கை

    • நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
    • போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் அள்ளி கடத்தப்படுவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் துணைக் காவல் கண்காணிப்பாளர் கலையரசனுக்கு ரகசிய தகவல் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலைய ரசன் தலைமையில் ஜேடர்பா ளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, தனிப்படை சிறப்பு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லட்சுமணன் ,தனிப்படை தலைமைக் காவலர் பிரவீன் ஆகி யோர் கொண்ட குழுவினர் நேற்று இரவு சுமார் 1.30 மணி அளவில் பிலிக்கல்பா ளையம் காவிரி ஆற்று பகுதிக்கு திடீரென சென்று ஆய்வு செய்தபோது காவிரி ஆற்றுக்குள் சுமார் 150க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. போலீசாரை பார்த்ததும் மணல் அள்ளிக்கொண்டிருந்த சுமார் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் போலீசார் மணல் மூட்டைகளின் சாக்குகளை அறுத்து மணலைகொட்டிச் சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் . இந்நிலையில் பரமத்தி வேலூர் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள காவிரி ஆற்றில் திருட்டுத்தனமாக மணலை அள்ளி மணல் திருட்டில் ஈடுபட்டால் அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என போலீஸ் டி.எஸ்.பி. கலையரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Next Story
    ×