என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
    X

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு

    • டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
    • மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

    பெரம்பூர்:

    வியாசர்பாடியை சேர்ந்த 17 வயது மாணவி, புரசைவாக்கத்தில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். வயிற்று வலியால் அவதிப்பட்ட அவரை பரிசோதனைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு தாய் அழைத்து சென்றார்.

    டாக்டர்கள் பரிசோதித்தபோது மாணவி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    விசாரணையில் மாணவியை புரசைவாக்கத்தில் உள்ள மற்றொரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவர், கர்ப்பம் ஆக்கியது தெரிந்தது.

    ஒரே பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும்போது அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகி உள்ளனர். இந்த நிலையில் மாணவியை கர்ப்பமாக்கிய பிளஸ்-2 மாணவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் 6-வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

    Next Story
    ×