என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரவுடி கொலையில் 4 பேரை காவலில் எடுக்க போலீசார் தீவிரம்
- சேலம் அயோத்தியாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது.
- கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.
வாழப்பாடி:
சேலம் அயோத்தி யாப்பட்டணம் அடுத்த காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த 5-ந்தேதி இரவு இரு சக்கர வாகனத்தில் பள்ளிப்பட்டி யைச் சேர்ந்த இளைஞர் பிரபாகர னுடன், காட்டூர் இடுகாடு அருகே சென்று கொண்டிருந்த ஆனந்தனை, பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த கும்பல், கொடூரமாக வெட்டிச்சாய்த்து கொலை செய்தது.
இந்த கும்பல் தாக்கி யதில், ஆனந்தனுடன் சென்ற பிரபாகரன் படுகாய மடைந்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி
களை கைது செய்த தனிப்படை அமைக்கப்பட்ட போலீசார் நடத்திய விசா ரணையில், கொலையுண்ட ஆனந்திற்கும், இதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினரான அன்பழகன் என்ற மற்றொரு ரவுடி கும்பலுக்கும் ஏற்பட்ட முன்விரோதத்தால் வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து, இந்த கும்பலைச் சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து, வாழப்பாடிஅருகே ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த காட்டூர் பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த அன்பழகன் மற்றும் இவரது கூட்டாளிகளான சக்திவேல், வெள்ளியம்பட்டியைச் சேர்ந்த அஜீத்குமார், மணிகண்டன் ஆகிய 4 பேரும் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணமடைந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய அன்பழகனின் கூட்டாளி களான வலசையூரைச் சேர்ந்த சீனிவாசன், (31).
வெள்ளியம்பட்டி பள்ளக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜா (35). ஆகிய 2 இளைஞர்களையும், காரிப்பட்டி போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 4 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்திட முடிவு செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்