என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஆதரவற்ற நிலையில் இறந்த முதியவரை அடக்கம் செய்த போலீசார்
- முதியவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மதுக்கூர்:
மதுக்கூர் அருகே உள்ள கன்னியாக்குறிச்சியில் ஆதவற்ற நிலையில் மாரிமுத்து (வயது 70) என்பவர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்ப ட்டது, இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார்.
இவருடைய உடலை யாரும் வாங்க முன்வரவில்லை. இதனால் அவருடைய உடலை உரிய இறுதி மரியாதைகளுடன் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது
இதை அறிந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து முதியவரின் உடலை மனிதநேயத்துடன் அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.
மதுக்கூர் போலீசார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் விஜய்ஆனந்த், தலைமை காவலர் சுரேஷ் மற்றும் திருவாரூர் ஈர உள்ளம் அமைப்பின் சார்பில் அதன் நிறுவனரும் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்க துணைத் தலைவருமாகிய அண்ணாதுரை, ராஜேஷ் ஆகியோர் முதியோர் உடலை நல்லடக்கம் செய்தனர்.