என் மலர்
உள்ளூர் செய்திகள்

போலீஸ் கமிஷனர் பிரபாகரன் திடீர் ஆய்வு
- பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
- சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.
திருப்பூர்
திருப்பூர் மாநகர் மையப் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம் இல்லாததால் அடிக்கடி குற்ற சம்பவம் நடைபெறுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன் ,உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளுடன் பஸ் நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் புறக்காவல் நிலையம் அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தனர்.
மேலும் 24 மணி நேரமும் பேருந்து நிலையத்தை சுற்றிலும் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது, சிசிடிவி .,கேமராக்கள் பொருத்துவது போன்றவை குறித்தும் கமிஷனர் பிரபாகரன் ஆலோசனை வழங்கினார்.
Next Story






