search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
    X

    அதியமான்கோட்டையில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி ஒரு கிலோ அரிசி, ஒருகிலோ சர்க்கரை, முழு கரும்பு ரூ.1,000 ரொக்கப்பணம் முதலியவற்றை பயனாளி ஒருவருக்கு வழங்கியபோது எடுத்த படம். தருமபுரி தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், உள்பட பலர் உள்ளனர்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு

    • சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.
    • அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

    இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு முழு கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி, ரொக்கம் ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

    தொடர்ந்து இன்று சென்னையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதனை அடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள 1077 நியாய விலை கடைகளில் உள்ள 4,66, 594 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வினை தருமபுரி அடுத்த அதியமா ன்கோட்டை நியாய விலை கடையில் கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

    மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கும் நிகழ்வு 5 நாட்கள் நடைபெறும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்கள் 5 நாட்களும் இந்த பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ள வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நல்லம்பள்ளி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.எஸ்.சண்முகம், நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், கூட்டுறவு பதிவாளர் ராமதாஸ், ஊராட்சி மன்றத்தலைவர் மாரியம்மாள் முனிராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×