என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பொன்னேரி அருகே 30 வழக்குகளில் தொடர்புடைய ரவுடி கைது
Byமாலை மலர்26 Jan 2025 12:15 PM IST
- கார்த்திக் என்பவரை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
பொன்னேரி ரெயில் நிலையம் சின்ன வேண்பாக்கம் ரெயில்வே பாலம் அருகே நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த பொன்னேரி அடுத்த பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்பவரை இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பி ஓடிய போது ரெயில்வே பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் கார்த்திக்கின் வலது காலில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடப்பட்டது. அவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட 30 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Next Story
×
X