search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில்   தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை
    X

    மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீர் பூலாம்பட்டி பகுதியில் பாய்ந்து வரும் காட்சி.

    பூலாம்பட்டி காவிரி கரை பகுதியில் தண்டோரா போட்டு வெள்ள அபாய எச்சரிக்கை

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.
    • இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.

    எடப்பாடி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால், அங்குள்ள அணைகள் முழு கொள்ளளவை எட்டிய நிலையில், காவிரியில் அதிகப்படியான தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கு மேலாக இருந்து வரும் நிலையில், தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமான மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது.

    இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் 16 கண் மதகு வழியாக உபரி நீராக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வரும் நிலையில், காவிரி கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பூலாம்பட்டி பகுதியில் தண்டோர மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை ஒடுக்கப்பட்டு வருகிறது.

    அதில் காவிரியில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில், கரையோர பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றினை கடக்கவோ, மீன் பிடித்தல், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும், காவிரி வடிகால் பகுதியில் உள்ள மணல் தீட்டுகளில் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதை தவிர்க்கவும், விளைபொருட்களை உலர்த்தவும் கூடாது எனவும், கரையோர நீர் பிடிப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×