search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் பொருநை இலக்கிய திருவிழா விழிப்புணர்வு பேரணி - அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

    • பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
    • பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது.

    நெல்லை:

    பொருநை இலக்கிய திருவிழா நெல்லையில் வருகிற 26,27-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.

    இதையொட்டி பொதுமக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி பாளை வ.உ.சி. மைதானத்தில் இன்று நடைபெற்றது.

    அதற்கு கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் மேயர் சரவணன், கமிஷனர் சிவகிருஷ்ண மூர்த்தி, துணைமேயர் ராஜூ, உதவி கலெக்டர் (பயிற்சி) கோகுல், பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், ஒருங்கி ணைப்பாளர் சபேசன் மற்றும் பள்ளி கல்வித்துறையினர் கலந்து கொண்டனர்.

    பேரணியில் பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பாளை வ.உ.சி. மைதானத்தில் தொடங்கிய பேரணி திருவனந்தபுரம் சாலை, மேடை போலீஸ் நிலையம் வழியாக மீண்டும் மைதானத்திற்கு வந்தடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய 5 வகை நிலங்களை குறிக்கும் வகையில் மக்களின் வாழ்வியல், நாகரீகம், தொழில் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் வேட மணிந்து பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×