என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
முத்துப்பேட்டையில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் இறால் விவசாயிகள் கருத்தரங்கு
- தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.
- திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டாரத்திற்குட்பட்ட முத்துப்பேட்டையில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்தும் இறால் விவசாயிகள் கருத்தரங்கு கூட்டம் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:-
கடல் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை இணைந்து இறால் வளர்ப்பின் வளரச்சி தொழில்நுட்பங்கள் மற்றும் நிகழ்கால பிரச்சனைகள் குறித்த இறால் விவசாயி கள் கருத்தரங்கு கூட்டத்தில், இறால் வளர்பாளர்களிடையே சமீபத்திய வளர்ச்சி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், சந்தையில் கிடைக்கும் புதிய தயாரிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை காட்சிப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நோக்கமாகும்.
தமிழக அரசு இறால் பண்ணையாளர்கள் முன்னேற்றத்திற்கான வழிவகைகளுக்கு உறுதுணையாக செயல்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத்தொடர்ந்து அவர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறையின் மூலம் நான்கு மீன் சில்லரை வியாபாரிகளுக்கு மானியத்துடன் கூடிய குளிர்காப்பு பெட்டி பொருத்திய இருசக்கர வாகனத்தினை வழங்கினார்.
இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர்கீர்த்தனா மணி, கோட்ட பொறியாளர் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் நாகப்பட்டினம் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு ஆணையம் உதவி இயக்குநர் வனச்சரகர் முத்துப்பேட்டை மற்றும் உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, திருத்துறைப்பூண்டி தாசில்தார் மலர்கொடி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், இறால் விவசாயிகள் கலந்து கொண்டனர்.