என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாளை 467 மையங்களில் நடக்கிறது- நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குரூப்-4 தேர்வுக்கு ஏற்பாடுகள் தயார்
- தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.
- நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் நடைபெறுகிறது.
நெல்லை:
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை)நடக்கிறது.
நெல்லை மாவட் டத்தில் நெல்லை, பாளை, மானூர், அம்பை, சேரன்மகாதேவி, நாங்குநேரி, திசையன்விளை, ராதாபுரம் ஆகிய 8 தாலுகாக்களில் 191 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள 230 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. இதனை 61, 086 பேர் எழுத உள்ளனர்.
தேர்வை கண்காணிக்க ஒவ்வொரு தாலுகாவிற்கும் தலா ஒரு துணைகலெக்டர் வீதம் 8 துணை கலெக்டர்களும், தேர்வெழுதுவோரை கண்காணிக்க 230 ஆய்வு அலுவலர்களும், 11 பறக்கும்படை அலுவலர்களும் தேர்வு பணிகள் மேற்கொள்ள தாசில்தார், துணை தாசில்தார் நிலையில் 59 சுற்றுக்குழு அலுவலர்களும், தேர்வு நடவடிக்கைகளை பதிவு செய்திடும் வகையில் 238 வீடியோ கிராபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், வீ.கே.புதூர், செங்கோட்டை, சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் ஆகிய 8 தாலுகாக்களில் 237 மையங்களில் தேர்வுகள் நாளை நடக்கிறது.
இந்த தேர்வில் 59,700 பேர் கலந்து கொண்டு எழுத உள்ளனர். 8 துணை கலெக்டர்கள், 237 ஆய்வு அலுவலர்கள், 8 பறக்கும் படையினர், 44 துணை தாசில்தார்கள், 237 வீடியோ கிராபர்கள் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மாவட்டங்களில் நடை–பெறும் தேர்வுக்காக அனைத்து மையங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதேநேரம் தேர்வர்களுக்கு பஸ் வசதியும், தீயணைப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கலெக்டர்கள் விஷ்ணு, ஆகாஷ் ஆகியோர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.