search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்
    X

    விழாவில் மாணவிகளுக்கு தருமபுரம் ஆதீனம் சான்றிதழ் வழங்கினார்.

    பரதநாட்டிய அரங்கேற்ற விழாவில் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கல்

    • ஆயக்கலைகள் 64-ல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலை அரங்கேற்ற விழா நடந்தது.
    • தருமை ஆதீனம் பரத கலையின் சிறப்பு குறித்து உரையாற்றினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் நிருத்யாலயா என்னும் நாட்டியப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் ஆடல் கலைமணி விருது பெற்ற புவனேஸ்வரி சுகுமார் என்பவர் மாணவிகளுக்கு பரதக் கலையை கற்றுக் கொடுத்து வருகிறார்.

    ஆயக்கலைகள் 64 இல் முதன்மையான கலையாக போற்றப்படும் பரதக்கலையை சிறப்போடு கற்று வரும் மாணவிகளின் அரங்கேற்ற விழா நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் விழாவிற்கு வருகை தந்து சலங்கை பூஜை செய்து மாணவிகளுக்கு சலங்கையும் நற்சான்றிதழையும் வழங்கினார்.

    தருமை ஆதீனம் பரதக் கலையின் சிறப்புகள் பற்றி தனது ஆசிரியர் உரையில் குறிப்பிட்டார். தொடர்ந்து மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றது.

    விழாவில் மயிலாடுதுறை நகரமன்ற தலைவர் செல்வராஜ், உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×