என் மலர்
உள்ளூர் செய்திகள்
சிக்கன் ஆர்டர் செய்வது போல நடித்து கடை உரிமையாளரின் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள கனியாமூரிலிருந்து கச்சிராயபாளையம் செல்லும் சாலையில் ஜீவா என்பவர் கே. பி. கே சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
நேற்று காலை பெயர் விலாசம் தெரியாத நபர் ஒருவர் 10 கிலோ சிக்கன் வேண்டும் என ஆர்டர் செய்துள்ளார். சிறிது நேரம் கழித்து கடை உரிமையாளர் ஜீவாவிடம் தன்னுடைய வண்டி பெட்ரோல் இல்லாமல் நின்று விட்டதாகவும் தங்கள் மோட்டார் சைக்கிளை கொடுங்கள் பெட்ரோல் வாங்கி வந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
மர்ம நபர் கூறியதை நம்பி கடைக்காரர் தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து ள்ளார். வண்டியை பெற்றுக் கொண்ட மர்ம நபர் பெட்ரோல் வாங்கி கொண்டு சிறிது நேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றவர் வெகு நேரமாகியும் வரவில்லை.சந்தேகம் அடைந்த கடை உரிமையாளர் ஜீவா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று செல்போனை தேடி பார்த்த போது செல்போ னையும் திருடி சென்றது தெரியவந்தது.
அதிர்ச்சி அடைந்த ஜீவா சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் திருடி சென்ற மர்ம நபரை கண்டுபிடித்து தருமாறு புகார் அளித்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து மோட்டார் சைக்கிளையும், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.