search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விடுமுறை நாளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படும்
    X

    விடுமுறை நாளிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்படும்

    • விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனே காப்பீடு செய்து பயன் பெறலாம்.
    • உரிய காலத்திற்குள் செலுத்தப்படுவதை அதிகாரிகளுக்கு ஆணையிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    சம்பா பருவத்திற்கு பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து விவசா யிகள் பயன்பெறு வதற்கு 2022 நவம்பர் 15ஆம் நாள் வரை காலஅவகாசம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதனால் இன்று மற்றும் நாளை ஆகிய இரு விடுமுறை நாட்களிலும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் திறந்து செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த வாய்ப்பை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் பயிர்களை உடனே காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    மேலும், பயிர்க்காப்பீடு செய்வதற்காக கூட்டுறவுச் சங்கத்தை அணுகும் எந்த ஒரு விவசாயிகளையும் திருப்பி அனுப்பாமல் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படுவதையும், வசூலிக்கப்பட்ட காப்பீட்டு கட்டணம் விடுபடாமல் சம்பந்தபட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிய காலத்திற்குள் செலுத்தப்படுவதையும் அதிகாரிகளுக்கு ஆணையி டப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×