search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு
    X

    புதுமைப்பெண் திட்டம் குறித்து முதல்-அமைச்சர் ஆய்வு

    • 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.
    • முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    சேலம்:

    சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 4 மாவட்ட கலெக்டர்களுடன் வளர்ச்சி பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது கிராமப்புற பகுதிகளில் கட்டப்படும் வீடுகளின் பணிகள் முன்னேற்றம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விடுவிக்கப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்தும் தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும் முதல்வரின் முகவரித் திட்டத்தின் கீழ் பெறப்பட்டு நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் குறித்தும் துறைவாரியாக தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. காலை உணவு திட்ட செயல்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசனை செய்த முதல் - அமைச்சர் ஸ்டாலின், அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி பயில மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    மேலும் பட்டா மாறுதல், இணையவழி பட்டாக்கள் வழங்குதல், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை நில எடுப்பு செய்யப்பட்டுள்ள காலி மனைகளில் வீட்டுமனை பட்டா வழங்குதல், மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குதல் உள்ளிட்ட பணிகள் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.

    Next Story
    ×