என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
    X

    திருவாரூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

    • இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி திருவாரூரில் நடக்கிறது.
    • திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு, போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு- தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் - மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

    முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களிலிருந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.

    இதில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு பணிவாய்ப்பு பெறலாம்.

    திறன் பயிற்சி, அயல் நாட்டு வேலைவாய்ப்பு மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதலும் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    எனவே விருப்பமுள்ள வேலை தேடும் இளைஞர்கள் சுய விவர அறிக்கை, கல்விச்சான்றுகள், ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம், முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், வேலை தேடுபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

    முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சார்ந்த தனியார்துறையில் வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உள்ளூர் பணியாளர்களை தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு தொலைபேசி எண்ணை 04366-224226 தொடர்பு கொண்டு பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×