என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
- தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
நெல்லை:
நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்களது கல்விச்சான்று மற்றும் இதர சான்றுகளுடன் பங்கேற்கலாம். வேலை தேடுவோரும், வேலை அளிக்கவுள்ள தனியார் நிறுவனங்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
தனியார் துறையில் வேலைவாய்ப்பைப் பெற்றாலும் அரசு வேலைக்கான பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது.
போட்டித் தேர்வுக்கு தயராகும் மாணவர்கள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் www.tamilnaducareerservices.
tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.
இத்தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் மரிய சகாய ஆண்டனி தெரிவித்துள்ளார்.






