search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
    X

    சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 

    மாநில அளவிலான சதுரங்க போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் வழங்கல்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க போட்டி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலாளர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    போட்டியை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி தொடக்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற 80 பேருக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் ஆகியவை வழங்கி பாராட்டினார்.

    பாபநாசம்அரசு வழக்க றிஞர் வெற்றிச்செல்வன், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலாளர் சந்தோஷ், திருச்சி மாவட்ட செயலாளர் தினகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    விழாவில் சதுரங்க வீரர்கள், பெற்றோர்கள், மாவட்ட, தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    Next Story
    ×