search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி அரசு பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு
    X

    கிருஷ்ணகிரி அரசு பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்ட எதிர்ப்பு

    • விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.
    • கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதை, வேறு பயன்பாட்டிற்கு மைதானத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பள்ளி மேலாண்மைக்குழு வலியுறுத்தி உள்ளனர்.

    இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழுவினர் கூறும்போது, இப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானம், 400 மீட்டர் ஓடுகளத்துடன் இருந்தது.

    இங்கு கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, கோ-கோ, ஹாகி உள்ளிட்ட அனைத்து விளையாட்டுக்களுக்கும் பயன்படுத்தி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திய விளையாட்டு மைதானம் ஆகும்.

    இந்த விளையாட்டு மைதானத்தில் அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவனை கட்டிடங்கள், மாணவியர் விடுதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டு, கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளது. இதனால் 400 மீட்டர் ஓடுதளம் குறுகியது. இதே போல் தடகளப்போட்டிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்த முடியாத அளவிற்கு சுருங்கிவிட்டது.

    இதனால் மாணவர்களின் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாக உள்ளது. இதே போல், காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்ட நிலையில், தற்போது அதுவும் குனறந்துவிட்டது.

    எனவே, இனிவரும் காலங்களில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் வேறு புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதியளிக்க கூடாது. விளையாட்டு மைதானத்தை வேறு பயன்பாட்டிற்கு தருவதையும் தவிர்க்க வேண்டும்.

    மேலும், மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மைதானத்தை சீரமைத்து தர வேண்டும். இது தொடர்பாக கலெக்டர் மற்றும் கல்வித்துறை அலுவலர்களிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தனர்.

    Next Story
    ×