என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சிங்காநல்லூர் ரெயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்
- சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
- திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
கோவை:
கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவை-நாகர்கோவில், மற்றும் பாலக்காடு- திருச்சி பயணிகள் ெரயில்கள் நின்று சென்றன.
கொரோனாவுக்கு பிறகு இந்த ெரயில்கள் எக்ஸ்பிரஸ் ெரயில்களாக மாற்றப்பட்டன. தொடர்ந்து இங்கு ெரயில்கள் நின்று செல்வதில்லை.
இதனை தொடர்ந்து கோவை சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் அனைத்து ெரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் இன்று காலை ெரயில் நிலையத்தை 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
இந்த போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர் நடராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் சிங்காநல்லூர் நிலையத்தில் ெரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.
போராட்டத்தின் போது, நா.கார்த்திக் கூறியதாவது:-சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ெரயில்கள் நின்று செல்வதில்லை. இதன் காரணமாக இங்கிருந்து திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் நூற்றுக்கணக்கானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இங்கு ரெயில்கள் நிறுத்த செல்ல வலியுறுத்தி சேலம் கோட்ட ெரயில்வே மேலாளர் தெற்கு ெரயில்வே பொது மேலாளர் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவில் கோவையில் இருந்து செல்லும் ெரயில்கள் மற்றும் பிற மாவட்டத்தில் இருந்து கோவை வரும் ெரயில்கள் சிங்காநல்லூர் ெரயில் நிலையத்தில் நின்று செல்ல உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அடுத்த கட்டமாக ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதில் திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் மனோகரன், சிங்கை பிரபாகரன், பகுதி செயலாளர் , தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி, கொங்குநாடு மக்கள் கட்சி தனபால், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல செயலாளர் சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தி.மு.க., ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளி ட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்