என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லை மண்டலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்-உணவு ஆணையத் தலைவர் உத்தரவு
- விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்
நெல்லை:
விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உணவு பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மாநில உணவு ஆணைய தலைவர் வாசுகி தலைமையில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு முன்னிலையில் அலுவலக கூட்டரங்கில் இன்று நடைபெற்றது.
இந்த ஆய்வு கூட்டத்தில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட வழங்கல் அலுவலர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள், நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர்கள், கூட்டுறவு துணை பதிவாளர்கள், சமூகநலத்துறை அலுவலர்கள், சத்துணவு திட்ட அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சமூகத்தில் பின் தங்கிய நிலையிலுள்ள திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கி அவர்களது உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.
நெல்லை மண்டலத்தில் உள்ள 5 மாவட்டங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர், திருநங்கைகள், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்தவர்கள், நரிக்குறவர்கள், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் குடும்ப அட்டைகள் வழங்கும் வழிமுறைகள் குறித்து அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் விளம்பரப் பலகைகள் வைக்க மாநில உணவு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நியாய விலைக் கடைகளுக்கு நேரில் வர இயலாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதிகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கான அங்கீகார படிவங்கள் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா, மாநில உணவு ஆணைய உறுப்பினர் கணேசன், இணை பதிவாளர் அழகிரி, மாவட்ட வழங்கல் அலுவலர் வள்ளிக்கண்ணு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்