search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் 515 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்- 13-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது
    X

    தென்காசி மாவட்டத்தில் 515 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம்- 13-ந்தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது

    • ஆலங்குளம் பகுதிகளில் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.
    • டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் உட்கோட்ட எல்கைக் குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 515 இருசக்கர மோட்டார் வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

    வருகிற 13, 14 மற்றும் 15-ந்தேதி ஆகிய 3 தினங்களில் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இதில் கலந்து கொண்டு வாகனங்களை ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் மேற்படி வாகனங்களை பாவூர்சத்திரம் வென்னி மலை முருகன் கோவில் வளாகத்தில் வருகிற 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரையிலான 5 நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரில் பார்வையிடலாம்.

    மேலும் தங்களின் பெயர், முகவரி அடங்கிய ஆதார் அட்டையுடன் ரூ.3000 முன்பணம் செலுத்தி பதிவு செய்து டோக்கன் பெற்று கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும்.

    வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் எடுத்த நாளிலேயே ஏலத் தெகையுடன் ஜி.எஸ்.டி. தொகையினையும் உடனடி யாக செலுத்தி வாகனத்தை எடுத்துச்செல்ல வேண்டும்.

    இத்தகவலை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு சாம்சன் தெரிவித் துள்ளார்.

    Next Story
    ×