search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் புகார் மனு வழங்கலாம் - போலீஸ் கமிஷனர் தகவல்
    X

    மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.

    அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் புகார் மனு வழங்கலாம் - போலீஸ் கமிஷனர் தகவல்

    • நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • எஸ்.பி. அலுவலகத்தில் இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை களில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு புகார் மனு கொடுக்கின்றனர்.

    அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பபட்டு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று நடைபெற்றது. இதில் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை வாங்கினார்.

    அப்போது பெறப்பட்ட மனுக்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். அப்போது பொதுமக்களிடம் கமிஷனர் ராஜேந்திரன் கூறும்போது, புதன்கிழமை மட்டுமின்றி வாரத்தின் அனைத்து நாட்களிலும் வேலை நாட்களில் கமிஷனர் அலுவலக்ததில் புகார் மனு பெறப்படும் என்றார்.

    முகாமில் துணை கமிஷ னர்கள் சீனிவாசன், சரவணக்குமார், தலைமை யிடத்து துணை கமிஷனர் அனிதா மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    எஸ்.பி.அலுவலகம்

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்திலும் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இதில் எஸ்.பி.சரவணன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

    ஏற்கனவே புகார் மனு கொடுத்தவர்கள் இன்று வரவழைக்கப்பட்டு அவர்கள் மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை கள் குறித்து அவர்களிடம் தெரி விக்கப்பட்டது. இன்று பிற்பகல் வரை சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புகார் மனு கொடுத்தனர்.

    நிகழ்ச்சியில் நில அபகரிப்பு சிறப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி. பர்னபாஸ், இன்ஸ்பெக்டர் மீராள் பானு மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×