search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை

    • காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு போதுமான பஸ் வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
    • பஸ்கள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்றால் அடுத்த பஸ்ஸிற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவின் தலைநகரம் நன்னிலம் ஆகும். இங்கு 70க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள், 10-க்கும் மேற்பட்ட அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள், 2 அரசு மேல்நிலைப்பள்ளிகள், ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி, 6-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகள், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயிலும் கலை அறிவியல் கல்லூரி, தனியார் நிதி நிறுவனங்கள் என உள்ள பகுதியாகும்.

    நன்னிலம், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய பெருநகரங்களுக்கு மையத்தில் அமைந்த ஊராகும். நன்னிலத்திற்கு மேற்கண்ட ஊர்களில் இருந்து அரசு ஊழியர்கள் அலுவலர்கள் பணியாளர்கள் பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவர்கள் வருகின்றனர். இவர்கள் காலை மாலை நேரங்களில் வந்து செல்வதற்கு போதுமான பேருந்து வசதி இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

    எனவே காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். கும்பகோணத்திலிருந்து ஒன்னேகால் மணி நேரத்திற்கு ஒரு பேருந்தும், மயிலாடுதுறை பகுதியில் இருந்து ஒன்னரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தும், திருவாரூரிலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்தும் இயக்கப்படுகிறது. பேருந்துகள் உரிய நேரத்திற்கு வரவில்லை என்றால், அடுத்த பேருந்திற்கு வெகு நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. பொதுமக்கள் பணிகள் பாதிப்படைகிறது கவலை தெரிவிக்கின்றனர்.

    காலை மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு அலுவலர்கள் எளிதாக சென்றடையும் வகையில், மாலை4.30 மணி அளவில் இருந்து மாலை 6 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டுமென கோரிக்கைவைத்து வருகின்றனர். பொதுமக்களின் கோரிக்கையை போக்குவரத்து துறை மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் நிறைவேற்றுமா என எதிர்பார்க்கின்றனர். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவார்கள்.

    Next Story
    ×