search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள  ஆர்வம் காட்டாத பொதுமக்கள் - சிறப்பு முகாம்களில் கூட்டம் இல்லை
    X

    பாளை மனக்காவலம்பிள்ளை மருத்துவமனையில் நடந்த முகாமில் பெண் ஒருவருக்கு தடுப்பூசி போடப்பட்ட காட்சி.

    நெல்லை மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆர்வம் காட்டாத பொதுமக்கள் - சிறப்பு முகாம்களில் கூட்டம் இல்லை

    • தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று நடத்தப்பட்டது.
    • மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டது.

    நெல்லை

    நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியிலும் இன்று ஏராளமான இடங்களில் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன.

    இது தவிர மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இதில் கொரோனா தடுப்பூசி முதல் தவணை மற்றும் இரண்டாவது தவணை செலுத்த தவறியவர்கள், முன்னெச்சரிக்கை தவணை செலுத்த தகுதியானவர்கள் அனைவரும் தங்களது ஆதார் அட்டை மற்றும் செல்போன் எண்ணுடன் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு அருகில் உள்ள முகாமிற்கு சென்று உரிய தடுப்பூசியை செலுத்தி கொண்டனர்.

    பூஸ்டர் டோஸ்

    மாநகரப் பகுதியில் பெரும்பாலான முகாம்களில் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி விட்டு இன்னும் சுமார் 10 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டி உள்ளது.

    இதேபோல், இருதவணை தடுப்பூசி செலுத்திய பெரும்பாலானோர் இன்னும் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை. மாநகர பகுதியில் மனக்காவலம்பிள்ளை ஆஸ்பத்திரியில் இன்று காலை சிலர் தடுப்பூசி போட வந்திருந்தனர். அவர்களுக்கு நர்சுகள் தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடமான சந்திப்பு ரெயில் நிலையத்திலும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    காரணம் என்ன?

    மாவட்டத்தை பொறுத்தவரை ஏராளமான முகாம்களில் தடுப்பூசி செலுத்துவதற்கு பொதுமக்கள் வரவில்லை.

    கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டதால் மக்களிடையே தடுப்பூசி செலுத்துவதற்கு ஆர்வம் இல்லாமல் போய்விட்டதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×