என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேத்தியாதோப்பு அருகே வேகத்தடை அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்
- வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்
- உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் புவனகிரி ஒன்றியம் சென்னை- கும்பகோணம் சிதம்பரம் பிரதான சாலை பின்னலூர் கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று திரண்டு வேகத்தடை அமைக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர் இது குறித்து தகவல் அறிந்து சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரூபன் குமார், இன்ஸ்பெக்டர் சேதுபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது சிவன் கோவில் அருகில் மற்றும் பஸ்நிறுத்தம் அருகில் வேகத்தடை அமைக்கப்பட்டிருந்தது.
தற்போது சாலை அமைக்கப்பட்ட பின்பு அந்த இடத்தில் வேகத் தடை அமைக்கப்படவில்லை . இதனால் தொடர்ந்து விபத்து நடக்கிறது. எனவே வேகத்தடை அமைக்கும்வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர். இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகளிடம் டி.எஸ்.பி. பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.