search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பயனடைந்த பொதுமக்கள் நெகிழ்ச்சி
    X

    தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் டிராக்டர் வாங்க கடனுதவி பெற்ற விவசாயி.

    தேனி மாவட்டத்தில் தாட்கோ மூலம் பயனடைந்த பொதுமக்கள் நெகிழ்ச்சி

    • தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை 158 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.
    • வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு திட்ட கழக(தாட்கோ)த்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி பிறமாநிலங்களுக்கு தமிழகம் முன்உதாரணமாக உள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் இதுவரை 158 பயனாளிகள் பயனடைந்துள்ளனர். அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் 23 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.

    மேலும் மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தாட்கோ மூலம் பயனடைந்த ஆண்டிபட்டி மேக்கிழார்பட்டியை சேர்ந்த சரவணன் கூறுகையில்,

    நான் விவசாய கூலி வேலை செய்து அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்தை நடத்தி வருகின்றேன். சொந்தமாக தொழில் தொடங்க பொருளாதார வசதி இல்லை. இந்த நிலையில் தமிழக அரசின் தாட்கோ மூலம் சொந்தமாக டிராக்டர் வாங்க இணையதளத்தில் விண்ணப்பித்தேன். இதில் அரசு மானியத்துடன் கடனுதவி வழங்கியது.

    இதனால் தற்போது ஓரளவு பொருளாதாரம் மேம்பட்டுள்ளது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

    பெரியகுளத்தை சேர்ந்த முருகன் கூறுகையில்,

    நான் தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்தேன். தாட்கோ திட்டத்தின்மூலம் சரக்கு வாகனம் வாங்க மானியத்துடன் கடனுதவி பெற்றேன். இதனால் தற்போது ஓரளவு பொருளாதார நிலை உயர்ந்துள்ளது. இதற்காக தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு திட்ட கழக(தாட்கோ)த்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி பிறமாநிலங்களுக்கு தமிழகம் முன்உதாரணமாக உள்ளது என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×