என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பொதுமக்கள் சாலை மறியல் பொதுமக்கள் சாலை மறியல்](https://media.maalaimalar.com/h-upload/2023/01/21/1824795-16.webp)
சாலை மறியலில் ஈடுப்பட்ட பொதுமக்கள்.
பொதுமக்கள் சாலை மறியல்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வயிற்றுவலி பிரச்சினையால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
- மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள ஓவர்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் குடவாசல் அருகே மஞ்சக்குடியில் உள்ள தனியார் கல்லூரி தமிழ் துறை விரிவுரையாளராக பணியற்றி வந்தார்.
இவருக்கு வயிற்றுவலி பிரச்சினை இருந்ததால் குடவாசலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும் அவருக்கு அந்த மருத்துவமனையில் அறுவை சிகிச்சையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அவரது உடல் நிலை திடீர்ரென மோசமானது. இதைத் தொடர்ந்து சண்முகவேல் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
உயிரிழந்த பேராசிரியர் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள், பொது மக்கள் சண்முகவேலின் உடலை வாங்க மறுத்து மன்னார்குடி அருகே ஓவர்சேரி கிராமத்தில் இன்று காலை சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது குறித்து சண்முக வேலின் மனைவி லலிதா அளித்த புகாரில் பேரில் குடவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.